தேவையான பொருட்கள் :
பன்னீர் – 2 கப்
மசித்த உருளைக்கிழங்கு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
All Purpose மாவு – 6 டேபிள் ஸ்பூன்
பிரட்தூள் – 2 கப்
சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கசூரி மேத்தி – 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் தேவையான அளவு பன்னீரை எடுத்து நன்றாக துருவி அல்லது அரைத்து ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து துருவிய அல்லது அரைத்த பன்னீருடன் சேர்த்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் All Purpose மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லி இலை, சிறிதளவு உப்பு மற்றும் கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மீண்டும் 2 டேபிள் ஸ்பூன் All Purpose மாவு சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்துகொள்ளவும்.
பின்னர் பிசைந்த மாவிலிருந்து சிறிய அளவில் மாவு எடுத்து முதலில் அதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
பிறகு அதை எண்ணெய் தடவிய உள்ளங்கையில் வைத்து கட்லெட் வடிவில் தட்டவும்.
அடுத்து இரண்டு தனி தட்டுகளில் பிரட்தூள் மற்றும் All Purpose மாவை தனித்தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கிக்கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் ரெடி செய்து வைத்துள்ள கட்லெட்டை எடுத்து முதலில் All Purpose மாவிலும், பின்னர் பிரட்தூள்களிலும் பிரட்டி எடுக்கவும்.
பின்னர் அவற்றை சூடான எண்ணெயில் போட்டு கட்லெட்டுகள் பொன்னிறமாக மாறும் வரை மிதமான தீயில் பொரிக்கவும்.