பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.
ஞானம் புதிய தொழில் செய்வதாக கூறி கரிகாலனிடம் ஏமாந்துபோய் கதறியழுதுள்ளார். தற்போது தர்ஷன் ஈஸ்வரியை தரகுறைவாக பேசியதால், ஈஸ்வரி அவரை அடித்துள்ளார்.
மேலும் ஈஸ்வரிக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஒருவரும் வீட்டிற்கு வந்ததால் குணசேகரன் குரூப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.