தேவையான பொருட்கள் :
முட்டை – 5
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்யும் முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து உற்றி அதில் கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்க வேண்டும்.
பின்னர் அடப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தைப் போட்டு கொள்ளுங்கள். சீரகம் பொரிந்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். முட்டை நன்கு வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி கிளறி இறக்கினால் சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் சாப்பிட தயார்.