சிலர் தங்களுக்கு பிடித்த ஆடைகளை கூட அணிய முடியாமல் தவிக்கின்றனர். காரணம் முழங்கையின் கருமை, தங்கள் அழகைக் கெடுத்துவிட்டதாக உணர்கிறார்கள். எனவே, இதை சரி செய்ய சிலர் பார்லர்களை நோக்கி ஓடுகின்றனர். ஆனால் பல சமயங்களில் அதனால் எந்த பயனும் இல்லை, பணம் செலவானதுதான் மிச்சம். அத்தகைய சூழ்நிலையில், சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் கருப்பு முழங்கைகளை சுலபமாக அகற்றலாம். அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்…
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தை பொலிவாக்க பெரிதும் உதவும். இப்போது உங்கள் முழங்கையில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சை சாற்றை முழங்கையில் தடவி ஓரிரு நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தயிர் மற்றும் உப்பு:
முழங்கையில் உள்ள கருமையைப் போக்க தயிர் சிறந்த வழியாகும். இதற்கு ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் உப்பு கலந்து அதை உங்கள் கருமையான முழங்கைகளில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் கருமையை நீக்கும்.
கற்றாழை ஜெல்:
முழங்கை கருமையைப் போக்க கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து அதை முழங்கையில் தடவி, 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கும். கற்றாழை ஜெல் சருமத்திற்கு புத்துணர்ச்சியாக்கும் மற்றும் பளபளப்பாக்கும்.
கடலை மாவு மற்றும் பால்:
கடலை மாவில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி அதை கருமையான முழங்கையில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருமை நீங்கும்.