பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 107 தொகுதிகளில் 35 தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்தவகையில் குறித்த 35 தொகுதிகளில் 18 தொகுதிகளை தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளதோடு பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 3 தொகுதிகளையும், லிபரல் டெமாக்கிரஸ் கட்சி 4 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
மேலும் இதுவரை வெளியான முடிவுகளில் தொழிற்கட்சி 319 ஆசனங்களையும், லிபரல் டெமாக்கிரஸ் கட்சி 114 ஆசனங்களையும், கன்சர்வேடிவ் கட்சி 117 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கிரீன் கட்சி 21 ஆசனங்களையும் வென்றுள்ளது. இதுவரை 122 ஆசனங்களை கன்சர்வேடிவ் கட்சி இழந்து கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றது.
எவ்வாறு இருப்பினும் பிரதமர் ரிஷி சுனக் தங்களது கட்சியின் வெற்றி வாய்ப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தொழிற்கட்சி கடந்த உள்ளாட்சி தேர்தலை விடவும் 52 ஆசனங்கள் அதிகமாக கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.