மாதவிடாய் சமயங்களில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
ஆரோக்கியமான உணவுகள்:
மாதவிடாய் சமயங்களில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். அதுதான் மிகவும் நல்லது. அதுவும் குறிப்பாக, மாதவிடாய் வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்பே பெண்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதுபோல், இரத்த போக்கு சமயத்தில் உடலில் கிருமிகள் சேருவதை தடுக்க உணவில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள், சுக்கு, மிளகு போன்றவை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
பெருங்காயம்:
மாதவிடாய் சரியாக வராமல் அவதிப்படுபவர்களும், அதிக ரத்தப்போக்கு உள்ளவர்களும், சினைப்பை நீர்க்கட்டி உள்ளவர்களும் உணவில் கட்டாயம் பெருங்காயம் சேர்க்க வேண்டும். ஏனெனில், இது புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை உடலில் அதிகரிக்க செய்யும்.
பச்சை இலை காய்கறிகள்:
மாதவிடாய் காலங்களில் பச்சை இலை காய்கறிகளை பெண்கள் அவசியம் உணவில் சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, கீரைகள், பழங்கள், தானியங்கள், ராகி, உளுந்து, முட்டை, பால், போன்றவற்றையும், அந்த சமயத்தில் ஏற்படும் தசைபிடிப்பை சரி செய்ய கேழ்வரகு, சோளம், கம்பு, தினை போன்ற தானிய வகைகளையும் உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு தெரியுமா…மாதவிடாய் சமயத்தில் உணவில் நெய் சேர்த்து கொண்டால், அஜீரண பிரச்சனைகள் வரவே வராது. முருங்கையிலையை சாப்பிட்டால் இரும்பு சத்து குறைபாடு வராது.
வெந்தயம்:
மாதவிடாய் சமயத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்க வெந்தயம் சாப்பிடலாம். மேலும் இது வயிறு வலியையும் போக்கும். இதற்கு வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடலாம் மற்றும் அந்த தண்ணீரை குடிக்கலாம். இதனால் உடல் சூடு தணியும் மற்றும் வயிறு வலி குறையும்.211