குணசேகரனை விவாகரத்து செய்யும் முடிவில் ஈஸ்வரி

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

தர்ஷினிக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரன் திட்டம் போட்ட நிலையில், வீட்டு பெண்கள் அனைவரும் அதனை தவிடுபொடியாக்கியுள்ளனர்.

குணசேகரன் என்னதான் தோற்றுப் போய் நின்றாலும் தற்போதும் மாஸாக இருக்கின்றார். இந்நிலையில் குணசேகரனை விவாகரத்து செய்வதற்கு ஈஸ்வரி முடிவு எடுத்துள்ளார்.

ஞானமும் புதிய தொழிலில் முன்னேறி வருவதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

Related Posts

Leave a Comment