முள்ளங்கி கூட்டு…

by Editor News

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி – 2 கிலோ

பெரிய வெங்காயம் – 1

பழுத்த தக்காளி – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப

உப்பு – சுவைக்கேற்ப

பாசிப் பருப்பு – 1/2 கப்

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

சீரகம் – 1/4 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் பாசிப் பருப்பை இரண்டு மூன்று முறை நன்றாக அலசி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும்.

அடுத்து முள்ளங்கியின் தோலை சீவி நீக்கி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி தனியே வைக்கவும்.

தற்போது அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து அதில் ஊறவைத்த பாசிப் பருப்பை சேர்த்து அதனுடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை மிதமான தீயில் சமைத்து எடுத்துக்கொள்ளவும்.

குறிப்பு : பொதுவாக முள்ளங்கி நீர் சத்துள்ள காய்கறி என்பதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

கடுகு வெடித்ததும் இந்த தாளிப்பை வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி கூட்டு சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்து பரிமாற ரெடி.

Related Posts

Leave a Comment