நீட் தேர்வு பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது.
இந்நிலையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. www.exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் இருந்து மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
வருகிற மே 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு நீட் நுழைவுத்தேர்வு நடக்கிறது; நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.