சருமப் பராமரிப்பு, அழகு, சரும ஆரோக்கியம் என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே உரியது என்கிற தவறான மனப்பான்மை மாறத் தொடங்கியிருக்கிறது. அதனாலேயே மார்க்கெட்டுகளில் ஆண்களுக்கான சருமப் பராமரிப்பு தயாரிப்புகளின் விற்பளையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.
வெயில் காலத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வியர்வையும் எண்ணெய் உற்பத்தியும் உண்டாகும். இதை கட்டுப்படுத்த முகத்தை நன்கு க்ளன்சிங் செய்ய வேண்டும்.
உங்களுடைய சருமத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மென்மையான ஃபேஸ்வாஷை பயன்படுத்தி முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவ வேண்டும். அதைத்தவிர வெறும் நீரில் அவ்வப்போது முகத்தைக் கழுவுவது நல்லது.
இது அழுக்குகளையும் எண்ணெய் சுரப்பையும் சுத்தம் செய்து சருமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
சருமத்தை எப்போதும் வறட்சி இல்லாமல் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
குறிப்பாக வெயில் காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைத் தடுக்க சருமத்தை நன்கு மாய்ஸ்ச்சராக வைத்துக் கொள்ள வேண்டும். திக்காக இல்லாமல் லைட் க்ரீமாக, வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ச்சரைஸரை பயன்படுத்துவது நல்லது.
சன் ஸ்க்ரீன் பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் இருக்கும் அளவுககு ஆண்களிடம் இல்லை. ஆண்களின் சருமத்துக்கு கட்டாயம் சன் ஸ்க்ரீன் தேவை.
அதிலும் வெயில் காலத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தாலே சன் ஸ்க்ரீன் இல்லாமல் வரக்கூடாது. வறண்ட சருமம் உடையவர்களாக இருந்தால் க்ரீம் பேஸ்டு சன் ஸ்க்ரீனும் ஆயில் ஸ்கின் உள்ளவர்களாக இருந்தால் ஜெல் பேஸ்டு சன் ஸ்கிரீனும் பயன்படுத்துங்கள்.
இது உங்களுடைய சருமத்தை சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். சன் டேன் வராமல் தடுக்கும்.
ஆண்களுடைய சருமத்துக்கு எக்ஸ்ஃபோலியேஷன் கட்டாயம் தேவை. வருடக்கணக்கில் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்காமலே இருப்பார்கள். இது மிக தவறு.
இப்படி இறந்த செல்கள் நீக்கப்படாமல் இருக்கும்போது சருமத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கபபடும். அதனால் நல்ல ஸ்கிரப் கொண்டு அல்லது அரிசி மாவு அல்லது காபி ஸ்கிரப் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை சருமத்தை ஸ்கிரப் செய்து. எக்ஸ்ஃபோலியேட் செய்வது நல்லது.
வெயில் காலத்தில் இரண்டு முறையாவது குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உடல் சூட்டைத் தணிக்கும்.
அதோடு வெயிலால் ஏற்படும் அதிகப்படியான வியர்வை, அழுக்ககள், எண்ணெய் உற்பத்தி ஆகியவற்றை சுத்தம் செய்து உங்களுடைய புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
வெயிலால் ஏற்படுகிற வறட்சியால் சருமம் மட்டுமின்றி உதடுகளும் டிரை ஆகும். இதைக் குறைத்து உதட்டை ஹைட்ரேட்டிங்காக வைத்திருக்க லிப் பாம் பயன்படுத்துங்கள்.
எந்த நிறங்களும் இல்லாத பிளெயின் லிப் பாம்கள் மார்க்கெட்டுகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன. அல்லது பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்தலாம்.
ரிம்மர் மற்றும் ஹாட்டான க்ரீம்கள் பயன்படுத்தி ஷேவ் செய்தால் அது சருமத்திற்கு எரிச்சலைத் தரும். அதனால் வெயில் காலத்தில் இந்த வகையான ஷேவிங் முறையைத் தவிர்த்திடுங்கள்.
அதற்கு பதிலாக கூலிங்காக இருக்கும் க்ரீம்கள், குறிப்பாக கூலிங் ஷேவில் ஜெல்கள் கிடைககும். அதை பயன்படுத்தி ஷேவ் செய்யலாம். ஷேவ் செய்தபிறகு, குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது. முகத் தசைகளை கடினமாகாமல் மென்மையாக வைத்திருக்க உதவும்.
மேலே சொன்ன எல்லா ஸ்கின் பராமரிப்புகளையும் செய்வதோடு ஆரோக்கியமான உணவ முறையும் அவசியம். இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
குறிப்பாக தலைமுடிக்கும் சருமத்திற்கும் மிக அவசியமான புரோட்டீன் மற்றும் பி வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். தினமும் உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிக்க சருமம் பளபளப்பாகவும் பொலிவாகவும் மாறும்.