பிரஷர் குக்கரில் வைத்து சமைக்க கூடாத உணவுகள்.!!

by Editor News

ஒரு சில உணவுகளை நாம் குக்கரில் கண்டிப்பாக சமைக்கவே கூடாது அந்த உணவுப் பொருட்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

கீரை வகைகள்:

கீரைகளை கடாயில் வைத்து வேக வைப்பது விட குக்கரில் மிகவும் விரைவாக சமைத்து விடலாம். அதனால் கீரைகளை சமைப்பதற்கு நாம் குக்கரை பயன்படுத்துவோம் ஆனால் கீரைகள் நாம் சமைக்கும் போது மிருதுவானதாக மாறிவிடும். அது நம் உடம்பிற்கு நல்லது கிடையாது. எனவே கீரைகளை குக்கரில் சமைக்க கூடாது.

இனிப்புகள்:

பழங்களை வைத்து செய்யக்கூடிய இனிப்புகள், மற்ற இனிப்பு பொருட்களான கேசரி, பாயாசம் போன்றவை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் செய்யக்கூடாது. பேக்கிங் சம்பந்தமான உணவு பொருட்களையும் இதில் செய்யக் கூடாது.

பழம்:

பழங்கள் பிறந்த குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க துவங்கியதிலிருந்து அந்த குழந்தைகளுக்கு பழங்களை குக்கரில் வைத்து மிகவும் மென்மையாக கொடுப்போம் ஆனால் அதன் மென்மை தன்மை பழத்தின் சத்துக்களையும் இழக்க செய்யும் எனவே பழத்தின் அனைத்து சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அப்படியே கொடுப்பது நல்லது.

பால் பொருட்கள்:

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர் மோர்‌ பன்னீர் போன்றவைகளை குக்கரில் சமைக்க கூடாது. அவ்வாறு சமைப்பது அதனுடைய தன்மையையும் சுவையையும் இழக்க செய்யும்.

பாஸ்தா:

பொழுதெல்லாம் குழந்தைகள் பாஸ்தா மேகி போன்ற விரைவு உணவுகளை ஏன் விரும்புகிறார்கள் இதனை சாதாரணமாகவே நாம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது கிடையாது. அதிலும் குக்கரில் சமைத்து சாப்பிடுவது இதனுடைய சீரான தன்மையை இழக்க செய்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே பாஸ்தாவை செய்யும் பொழுது கடாயை பயன்படுத்தி சமைப்பது நல்லது.

Related Posts

Leave a Comment