மே 3-ம் தேதி அரண்மனை 4 படம் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நடிகர் பிரசாந்துடன் அரண்மனை 4 படத்தின் இயக்குநர் சுந்தர்சி பேட்டி கொடுத்தபோது, பேசிய சுந்தர் சி, பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
வின்னர் படத்தில் கடற்கரையில் பிரசாந்தும், கிரணும் இணைந்து ஆடும் ‘எந்தன் உயிர் காதலே…’ பாடல் உருவான விதம் அதன் பின்னணி குறித்து இயக்குநர் சுந்தர் சி மனம் திறந்துள்ளார்.
படத்திற்கு இசையமைத்த யுவன் இந்த பாடலை கொடுக்கும்போதே படம் முடிவதற்கு முன்னால் இப்படி ஒரு பாடலை வைத்தால் சரியாக இருக்காது என்பது போல கூறினாராம். அதற்கு தான் இந்த பாடலை கரீபியனில் காட்சியாக்க உள்ளேன். அதனால் ரசிகர்கள் எழுந்து செல்ல வாய்ப்பில்லை எனக் கூறினாராம்.
பின்னர் சில காரணங்களால் கரீபியனில் பாடல் படமாக்க இயலாததால் கோவாவில் படம் பிடிக்க திட்டமிட்டனரா. ஆனால் அந்த திட்டமும் சில காரணங்களால் தள்ளி போகவே பாடலை மகாபலிபுரம் கடற்கரையில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
பாடலுக்கான காட்சியை படமாக்க தொடங்கும் போது யுவன் சங்கர் ராஜா கூறியது சுந்தர் சி-க்கு நினைவு வந்துள்ளது. எப்படியேனும் இந்த பாடலை ஹிட் அடிக்க வைக்க வேண்டும் என நினைத்த சுந்தர் சி, பிரசாந்திடம் இது குறித்து பேசியுள்ளார்.
அந்த பாடலில் நடிகை கிரணுடன் நீங்களும் சட்டையின் பட்டனை திறந்து விட்டு கிளாமராக நடிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். பாடலும் அவ்வாறே படமாக்கப்பட்டு தியேட்டரில் ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக அமைந்தது எனக் கூறியுள்ளார்.
பாடல் நன்றாக வரவேண்டும் என்பதால் பிரசாந்தை ஐட்டம் பாயாக மாற்றிவிட்டேன் என நகைச்சுவையாக அந்த பேட்டியில் சுந்தர் சி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.