பிரித்தானியாவில், சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் மோசமான புகைப்படங்களை வைத்திருந்த 85 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிரித்தானியாவின் Surreyயில் வசித்து வந்த Mundy என்ற முதியவர், தேசிய முகமை குற்றவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த முதியவரிடமிருந்து Floppy discகள், CDகள், USBகள் மற்றும் Hard drive கள் என 47 டிஜிட்டல் சேமிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் 31 பிள்ளைகளின் அநாகரீகமான படங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த முதியவரால் இரு தசாப்தங்களாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 58,000 சிறுவர்களின் புகைப்படங்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர், பதிவிறக்கம் செய்த படங்களில் பெரும்பாலானவை 8 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுடையது என தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்காக இந்த Peer-to-Peer பகிர்வு முறையை பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், குழந்தைகள் தொடர்பினால் தவறான படங்களை முதலில் பார்த்ததாகவும், துஷ்பிரயோகத்தின் வரையறை என்னவென்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது ஆர்வம் இன்பத்திற்காக மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுவர்களின் மோசமான படங்கள் தொடர்பான 3 குற்றங்களை ஒப்புக்கொண்ட முதியவரான Mundyக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.