பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.
தர்ஷினிக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரன் திட்டம் போட்ட நிலையில், வீட்டு பெண்கள் அனைவரும் அதனை தவிடுபொடியாக்கியுள்ளனர்.
தர்ஷினியின் திருமணத்தினை நடத்தி தனது கௌரவத்தை காப்பாற்ற நினைத்த குணசேகரனுக்கு சரியான அடி விழுந்துள்ளது. வீட்டில் உள்ள பெண்களும் சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் எஸ்கேப் ஆகிய தர்ஷினி போட்டியில் கலந்து கொண்டு விளையாடினாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.