தேவையான பொருட்கள் :
நண்டு – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவடகம் – 1/2 உருண்டை
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தண்ணீர் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
துருவிய தேங்காய் – 1 கப்
பெருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
நண்டை சுத்தம் செய்து அதன் ஓடுகளை பிரித்து நன்கு அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும்.
பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கறிவடகத்தை சேர்த்து கருகவிடாமல் வறுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் சுத்தம் செய்த நண்டு துண்டுகளை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கொள்ளவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
நண்டு நன்றாக வெந்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் கறிவேப்பிலையை சேர்த்து இறக்கினால் காரசாரமான நண்டு மசாலா கிரேவி சாதத்துடன் பரிமாற ரெடி.