தேவையான பொருட்கள் :
பழுத்த தக்காளி – 1
புளி – பாதி நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
வரமிளகாய் – 1
பூண்டு – 8 பல்
சீரகம் – 3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவுதாளிக்க தேவையானவை :
எண்ணெய் – 1/4 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
பின்னர் பூண்டு, மிளகு, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி அதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பழுத்த தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து அதையும் புளி கரைசலுடன் சேர்த்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து கலந்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை போட்டுக்கொள்ளவும்.
கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள ரசக்கலவையை சேர்த்து நன்கு கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
ரசம் நுரைத்து ஒரு கொதியுடன் வாசம் வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கிவிடுங்கள்.
இந்த ரசத்தை குழைந்த சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் ஜீரண கோளாறு சரியாகும்.