பொதுவாகவே தண்ணீர் இன்றி உலகில் உயிர்வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்துள்ளது.
மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது. தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உயிர்காக்கும் தண்ணீரை எவ்வாறு பருக வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டியது முக்கியம்.
அந்த வகையில் குளிர்ந்த நீரை பருகுவது உடல் ஆரோக்கியத்தில் எவ்வாறான பாதக தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடை காலத்திலும், அதிக வெப்பம் இருக்கும் காலத்திலும் தாக்கத்தை தணிக்க குளிர்ந்த நீரை குடிப்போம். இருப்பினும், திடீரென அதிக அளவு குளிர்ந்த நீரைக் குடிப்பது உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
அதிக அளவில் குளிர்ச்சியாக உள்ள நீரை குடிப்பது நல்லது இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதய நோயாளிகள் குளிர்ந்த நீரை அதிகமாகக் குடிக்கக் கூடாது. நீங்கள் குளிர்ந்த நீரைக் குடித்தால், உடலில் கொழுப்பு குறையாது.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பொதுவாகவே கோடைகாலத்திலும் குளிர்ந்த நீரை பருகுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் மறந்தும் கூட குளிர்ந்த நீரை குடிக்காதீர்கள். குளிர்ந்த நீரைக் குடிப்பதால் இரத்த நாளங்கள் சுருங்கி, செரிமானத்தில் பிரச்சனைகளை உண்டாக்கி, வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே குளிர் காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்பது மிகவும் அவசியம். குளிர்ந்த நீரும் இதயத் துடிப்பைக் குறைக்கும். ஏனெனில் குளிர்ந்த காலநிலையில் தண்ணீர் குடிப்பதால் நரம்புகள் தூண்டப்பட்டு, இதயத் துடிப்பைக் குறைக்கும்.
அதனால் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பது சில சமயங்களில் உயிர் ஆபத்தை கூட ஏற்படுத்தலாம். எப்போதும் வெதுவெதுப்பான நீரை குடிப்பது மாத்திரமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.