சிக்கன் சால்னா…!

by Editor News

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு தேவையானவை :

எண்ணெய் – 1 டீஸ்பூன்

துருவிய தேங்காய் – 1 கப்

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

கசகசா – 3 டேபிள் ஸ்பூன்

பட்டை – 2 இன்ச்

கிராம்பு – 5

ஏலக்காய் – 5

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், கசகசா மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து வதக்கிக்கொள்ளுங்கள்.

மசாலாவின் பச்சை வாசம் போனதும் அலசி வைத்துள்ள சிக்கனை சேர்த்து மசாலா சிக்கனுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட்டுக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி பிறகு குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும்வரை விட்டுவிடவும்.

குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து ஏற்கனவே நாம் ரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதில் ஊற்றி கிளறிவிட்டுக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10-15 நிமிடங்களுக்கு அதன் பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின் அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான சிக்கன் சால்னா சாப்பிட ரெடி.

Related Posts

Leave a Comment