தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 1/2 கப்
பழுத்த தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 5 பல்
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ரசப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை :
எண்ணெய் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் துவரம் பருப்பை இரண்டு, மூன்று முறை நன்றாக அலசி ஒரு குக்கரில் போட்டு வேகவைத்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு கொள்ளவும்.
கடுகு வெடித்ததும் சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
பிறகு அதில் சிறிதளவு உப்பு, சர்க்கரை மற்றும் ரசப்பொடி சேர்த்து நன்கு கிளறி கொள்ளுங்கள்.
அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், கரைத்து வைத்துள்ள புளிச்சாறு மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
இது நன்கு கொதித்ததும் ஏற்கனவே நாம் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான பருப்பு ரசம் சாப்பிட ரெடி.
இந்த ரசத்தை நீங்கள் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.