மசாலா மோர்…!

by Editor News

மசாலா மோர் செய்ய தேவையான பொருட்கள் :

கெட்டியான புளித்த தயிர், கருவேப்பில்லை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு.

செய்முறை :

மிக்ஸி ஜாரில் கெட்டியான புளித்த தயிரை எடுத்துக் கொண்டு அதனுடன் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்தால் சுவையான மசாலா மோர் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெயில் காலத்தில் தாராளமாக குடிக்கலாம்.

இந்த மசாலா மோர் உடலை குளிர்ச்சிப்படுத்துவதோடு, உடலில் நீர் சத்தை அதிகரிக்கிறது. வெயில் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. சருமத்தில் ஏற்படும் நோயை தடுக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் இந்த மசாலா மோரில் இருப்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Related Posts

Leave a Comment