மருத்துவதுறையில் ஒயின் தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளின் முடிவில் ஒயின் புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும் இருதயத்தை பாதுகாப்பதாகவும் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனோடு வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தத்தையும் தடுப்பதாக கூறுகிறது.
ஒயின் குடிப்பதால் நல்ல பலன் இருப்பதை போலவே அதற்கு எதிர்மறையான விளைவுகளும் உள்ளன. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கெட்ட கொழுப்பு உள்ளவர்கள் ஒயின் குடிப்பதை தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்பக புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் ஒயின் நல்லதல்ல.
ஒயின் என்பது உண்மையில் ஒரு மது. ஒரு கிராம் மாவுப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது. அதேபோல ஒரு கிராம் புரதத்தில் 4 கலோரிகள் உள்ளன. ஆனால் ஒரு மில்லி லிட்டர் மதுவில் மட்டுமே கலோரியின் அளவு 7 ஆக இருக்கிறது. இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.
நிறமற்ற ஒயின் உற்பத்தியின் போது புளிக்க விடும் முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது. ரெட் ஒயின், நிறமற்ற ஒயினைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.
ஒயின் உட்பட எந்தவிதமான ஆல்கஹால் பொருட்களையும் குடிக்காமலிருப்பது நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு பொருள்களில் இருந்தும் நாம் தாராளமாக பெற்று கொள்ளலாம்.