ரவா கேசரி…!

by Editor News

தேவையான பொருட்கள் :

ரவை – 1/2 கப்

பால் – 2 கப்

சர்க்கரை – இனிப்பிற்கேற்ப

முந்திரி – 10

உலர் திராட்சை – 10

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

குங்குமப்பூ – ஒரு பின்ச்

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் ரவையை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து தட்டில் மாற்றிக்கொள்ளுங்கள்.

பின்பு வெதுவெதுப்பான 1 டேபிள் ஸ்பூன் பாலில் குங்குமப்பூவை போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து மீதமுள்ள பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் கிளறி விட்டுக்கொள்ளுங்கள்.

பின் அதில் குங்குமப்பூ பாலையம் சேர்த்து மிதமான தீயில் தொடர்ந்து 1 நிமிடம் கிளறி விடுங்கள்.

ரவை நன்கு வெந்ததும் அதில் உங்கள் சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி கொள்ளவும்.

இது சற்று கெட்டியாகும் பதத்திற்கு வந்ததும் அதில் சிறிதளவு நெய் சேர்த்து கிளறி பின்னர் அதில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான பால் ரவா கேசரி சுவைக்க ரெடி.

Related Posts

Leave a Comment