18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நேற்று முதல் கட்டமாக நடைபெற்றது. தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்பாக வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. கள்ளக்குறிச்சியில் 79.25%, பெரம்பலூரில் 77.37%, சிதம்பரத்தில் 75.32% வாக்குகளும் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென் சென்னையில் 54.27%, வட சென்னையில் 60.13%, ஸ்ரீ பெரும்பத்தூரில் 60.21% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
வடசென்னை
2019 தேர்தல் – 67.2%
2024 தேர்தல்- 60.13%
தென்சென்னை
2019 தேர்தல் – 59.6%
2024 தேர்தல்- 54.27%
மத்திய சென்னை
2019 தேர்தல் – 60.7%
2024 தேர்தல்- 53.91%
இருப்பினும் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.