ஐஸ்வர்யாவுக்கு பளார் விட்ட அபிராமி… கர்ப்பம் குறித்து டாக்டர் கொடுத்த ட்விஸ்ட்

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா அபிராமி கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ஐஸ்வர்யா சைடு கேப்பில் தனியாக வந்து ரியாவுக்கு போன் போட்டு ஏதாவது ஐடியா கேட்க, அவளும் ஒரு ஐடியா சொல்ல அது ஃபெயிலியர் ஆகிறது. இதையடுத்து வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா அபிராமியுடன் கிளம்பி ஹாஸ்பிடல் வருகிறாள்.

ஹாஸ்பிடலில் டாக்டர் ஐஸ்வர்யாவின் நண்பராக இருக்க, ஓர் அளவிற்கு நிம்மதி அடைகிறார். இருந்தாலும் டாக்டர் ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்ய, அவள் கர்ப்பம் இல்லை என தெரிய வர, அபிராமி மற்றும் அருணிடம் விஷயத்தை சொல்ல அதிர்ச்சி அடைந்து ஐஸ்வர்யாவை திட்டி அறைகின்றனர். கடைசியில் இது ஐஸ்வர்யா கண்ட பகல் கனவு என தெரிய வருகிறது. இதையடுத்து பரிசோதனை செய்யும் டாக்டரிடம் ஐஸ்வர்யா கெஞ்சி கூத்தாடி உண்மையை மறைக்க ஒப்புக்கொள்ள வைக்கிறாள்.

பிறகு டாக்டர் ஐஸ்வர்யா கர்ப்பம் தான் குழந்தை நன்றாக இருப்பதாக பொய் சொல்கிறார். அடுத்ததாக மில்லில் தொழிலாளர்கள் சாப்பாடு வாங்க லைனில் நிற்க கார்த்தியும் அவர்களோடு லைனில் இருக்கிறார். மற்ற தொழிலாளர்கள் நீங்க எதுக்கு நிற்கிறீர்கள் என்று கேட்க நானும் தொழிலாளி தானே லைனில் இருந்து தான் சாப்பாடு வாங்கணும் என்று நின்று சாப்பாடு வாங்கி சாப்பிட, சாப்பாடு நன்றாகவே இல்லை என்பது தெரிய வருகிறது.

எப்போதும் இப்படிதான் சாப்பாடு போடுகிறார்கள் என்று தொழிலாளர்கள் சொல்ல, கார்த்திக் மேனேஜரை கூப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment