தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 1/2 கப்
முருங்கைக்காய் – 1
கத்திரிக்காய் – 1
பெரிய வெங்காயம் – 1
சின்ன வெங்காயம் – 2
பழுத்த தக்காளி – 2
பூண்டு – 3 பல்
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் துவரம் பருப்பை இரண்டு, மூன்று முறை நன்றாக தண்ணீரில் அலசி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து அதில் துவரம் பருப்பு, சின்ன வெங்காயம் மற்றும் இடித்த பூண்டு ஆகியவற்றைப் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 முதல் 6 விசில் வரும் வரை விடவும்.
இதற்கிடையே மற்றொரு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்துக்கொள்ளவும்.
கடுகு வெடித்தததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காயை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பின்னர் அதில் சிறிதளவு உப்பு மற்றும் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து மீண்டும் அதை அடுப்பில் வைக்கவும்.
தற்போது மிதமான தீயில் வேகவைத்த பருப்பை மசித்து அதில் சாம்பார் பொடி, பெருங்காயப்பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதனுடன் வதக்கிய காய்கறி கலவையை சேர்த்து தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
காய்கறிகள் நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான உடனடி சாம்பார் ரெடி.