தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்..!

by Editor News

வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதுவரை நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரண்டு பதிவுகளையும், ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிகார் துணை முதலமைச்சர் சம்ராத் சௌத்ரி ஆகியோரின் இரண்டு பதிவுகளை நீக்கக் கோரி, ஏப்ரல் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்கு பதிவுகளையும் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment