சுண்டைக்காய் வத்தல் குழம்பு…!

by Editor News

தேவையான பொருட்கள் :

சுண்டக்காய் வத்தல் – 1 கப்

சின்ன வெங்காயம் – 10

புளி – 75 கிராம்

வரமிளகாய் – 4

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

அரிசி – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

கருப்பு மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்

வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை :

கடுகு – 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் புளியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கரைத்து வடிகட்டி கரைசலை தனியே வைத்துக்கொள்ளவும்.

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் வெந்தயத்தை போட்டு நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

வறுத்த வெந்தயம் ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.

பின்னர் அதே கடாயில் கொத்தமல்லி விதைகள், அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கருப்பு மிளகு மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும்.

வறுத்த அனைத்தும் நன்கு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தற்போது மண் சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டுக்கொள்ளவும்.

கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் சுண்டக்காய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள வெந்தயப் பொடியை சேர்த்து கிளறி விடவும்.

பிறகு அதில் புளி கரைசலை சேர்த்து கலந்துவிட்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொள்ளவும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மசாலாக்களின் பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதிக்க விட்டு அதன் மேல் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் சுவையான நாவூற வைக்கும் சுண்டைக்காய் வத்தல் குழம்பு சாப்பிட ரெடி.

Related Posts

Leave a Comment