ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட் போன்ற உணவுப் பொருட்கள் ஆரோக்கிய பானம் வகையில் இருந்து நீக்க வேண்டும்.!? மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

by Editor News

இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து ஈ -காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் இணைய வலைத்தளங்களில் உள்ள உணவுப் பொருட்களை முறையாக வகைப்படுத்துதலை உறுதி செய்ய சொல்லி கேட்டுக்கொண்டது. இ-காமர்ஸ் வலைத்தளங்களில் தானிய அடிப்படையிலான பானம், மால்ட் அடிப்படையிலான பானம் போன்றவைகள் ஆரோக்கிய பானம் என்ற வகையில் விற்கப்படுவதால் இந்த முடிவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தினால் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் கீழ் அடிப்படையில் ஆரோக்கிய பானம் என்ற சொல் எங்கும் தரப்படுத்தப்படவில்லை என்று FSSAI தெளிவுபடுத்தி இருப்பதால் ஈ -காமர்ஸ் வலைத்தளங்களில் ஆரோக்கிய பானம் என்ற அடிப்படையில் விற்கப்படும் பானங்களை உடனடியாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று ஆணை வெளியிட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் தன்மை, செயல்பாட்டு பண்புகள் போன்றவற்றின் வெளிப்பாட்டுத்தன்மை மேம்படுத்துவது, தவறான தகவல்களால் நுகர்வோர்கள் பாதிக்காமல் இருப்பது தெளிவுபடுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் தகவல்களின் மூலம் நுகர்வோர்கள் சரியான உணவு பொருட்களை தேர்வு செய்வது போன்றவற்றை உறுதி செய்யும் விதமாக இச்சட்டம் அமைந்துள்ளது. குறிப்பாக ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட் போன்ற உணவுப் பொருட்கள் ஆரோக்கியபானம் என்ற வகையில் இருந்து நீக்கப்பட்டு முறையான தகவல்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment