மீண்டும் தலை தூக்கும் டெங்கு!

by Editor News

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அதிகமான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் எனவும், இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,527 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மேல் மாகாணத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment