தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
அம்ச்சூர் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் கொண்டைக்கடலையை நன்றாக அலசி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து அதில் ஊறவைத்த கொண்டைக்கடலை, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் கொண்டைக்கடலையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மிதமான தீயில் 3 லிருந்து 4 விசில் வரும் வரை விடவும்.
குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் கொண்டைக்கடலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் தனியே வைத்து கொள்ளவும்.
பின்னர் நாம் ஏற்கனவே வேக வைத்து எடுத்து வைத்துள்ள கொண்டைக்கடலையில் இருந்து ஒரு கையளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு மைய அரைத்து எடுத்துகொள்ளுங்கள்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் அம்ச்சூர் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வாதிகக்கிக்கொள்ளவும்.
தக்காளி நன்கு குழைந்து மென்மையாக வதங்கியவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து சமைக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து பிறகு அதனுடன் ஏற்கனவே நாம் அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலையை போட்டு நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் அதில் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
இறுதியாக குழம்பில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கினால் சுவையான கொண்டைக்கடலை குழம்பு சாப்பிட தயார்.
இந்த கொண்டைக்கடலை குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அதன் சுவை அருமையாக இருக்கும்.