உடலுறவு என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகும். மேலும், அனைவருக்கும் பாலியல் கல்வி அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், செக்ஸ் விஷயத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி அனைவரும் அறிந்திருப்பது மிகவும் அவசியம். எனவே, அவற்றை நீங்கள் முறையாக பின்பற்றினால் உங்களுக்கு சிறந்த செக்ஸ் அனுபவத்தைத் தருவது மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உடலுறவின் சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கும்.
ஆணுறை:
ஆணுறை போன்ற நல்ல பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொள்ளாதீர்கள். ஏனெனில், ஆணுறைகள் தேவையற்ற கர்ப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, பாலியல் பரவும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றன.
கர்ப்ப காலம்:
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால், கருப்பை வாய், நஞ்சுக்கொடி, பால்வினை நோய்கள் போன்ற பல காரணிகள் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
பிகினி மெழுகு:
பிகினி மெழுகிற்குப் பிறகு உடனடியாக உடலுறவு கொண்டால் பிறப்புறுப்பை சுற்றியுள்ள உணர்திறன் வாய்ந்த சருமத்தை சேதப்படுத்தும். எனவே, சருமம் குணமடைய நேரம் கொடுங்கள். அதற்கு, பிகினி மெழுகிற்கு பிறகு குறைந்தது ஒரு நாளாவது உடலுறவு கொள்ளாமல் இருப்பது நல்லது.
குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு:
பிரசவத்திற்குப் பிறகு சில மாதங்கள் உடலுறவு இல்லாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, குழந்தை பிறந்த பிறகு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளி உங்கள் உடல் பிரசவத்திலிருந்து மீட்க உதவும்.
சிறுநீர் பிரச்சினை:
பொதுவாகவே, பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அதிகம் வருவது வழக்கம். மேலும் இந்த பிரச்சினையால் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டிருந்தால், சில நாட்களுக்கு உடலுறவில் இருந்து விலகி இருப்பது தான் நல்லது. மீறினால், அது உங்கள் துணைக்கும் பரவும்.