தேவையான பொருட்கள் :
பூண்டு – 1 கப்
எலுமிச்சை சாறு – 1/2 கப்
கொத்தமல்லி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் கொத்தமல்லி விதைகளை போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதே கடாயில் சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த அனைத்தும் நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் தோலுரித்த பூண்டை போட்டு வதக்கிக்கொள்ளவும்.
பூண்டு பாதியளவு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட்டுக்கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை ஊற்றி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறிவிடவும்.
ஊறுகாய் சற்று கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கினால் ருசியான பூண்டு ஊறுகாய் ரெடி.
இந்த பூண்டு ஊறுகாயை நன்றாக ஆறவிட்டு ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் சில மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.