உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், அந்நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் முற்றாக அழிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனில் அதிகளவான மக்கள் தொகைக் கொண்ட நகரமும், அந்நாட்டின் தலைநகரமுமான கிவ் மீதே ரஷ்யா இத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனால், கீவ் நகரிலுள்ள ட்ரிபிலியா எனப்படும் மின் உற்பத்தி நிலையம் முற்றாக அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்தே அந்நாட்டின் மூன்று பிரதான பகுதிகளுக்கும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில், ரஷ்;யா நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவென ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யா இராணுவத்தின் பலத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் சில தாக்குதல்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனின் குறித்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து அதிகளவாக புகை வெளியேறும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலையடுத்து உக்ரைனிலுள்ள பல இடங்கள் நேற்றையதினம் குறி வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் 80 இக்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் உள்ளுர் கட்டமைப்புக்களை குறிவைத்தே ரஷ்;யா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.