பிரபல நடிகர், அருள்மணி காலமானார்..

by Editor News

நடிகர் அருள்மணி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருந்தவர் அருள்மணி. இவர் வேல், அழகி, தென்றல், தாண்டவக்கோனே, சிங்கம், லிங்கா என பல படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான நடிகராக வலம் வந்தார். அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டிய அவர் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்தார்.

இந்நிலையில் அவர் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று பிரச்சாரத்திற்கு இடையே சற்று ஓய்வெடுத்த நிலையில், தீடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அருள்மணியின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment