பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.
காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் அவரது மகள் வெண்பா ஏக்கத்தில் காணப்படுகின்றார்.
தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்த நிலையில், தற்போது நின்று போயுள்ளது. ஆனால் தர்ஷனுக்கு திருமணம் என்று குணசேகரன் டுவிஸ்ட் கொடுத்துள்ளார்.
இதனை குடும்பத்தில் யாரும் எதிர்பாராத நிலையில், ஈஸ்வரி மட்டும் தனது குழந்தைகளுக்காக வாதாடி வருகின்றார். மற்றொரு புறம் மாப்பிள்ளையை கடத்தி வைத்த இடத்தினை கரிகாலன் அறிந்து காணொளி எடுக்கின்றார். கதையின் அடுத்த லெவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.