தேவையான பொருட்கள் :
கடலைப் பருப்பு – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 1/2 கப்
முந்திரி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மஞ்சள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பட்டை – 1
லவங்கம் – 1
கிராம்பு – 1
எண்ணெய் – 2 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் கடலை பருப்பை இரண்டு மூன்று முறை நன்றாக அலசி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
கடலை பருப்பு நன்றாக உறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டில் துணியை பரப்பி அதில் அரைத்த கடலைப்பருப்பை வைத்து 15 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளுங்கள்.
கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் கிராம்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இதன் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி மற்றும் சோம்பு சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
குழம்பு கொதித்ததும் வேக வைத்த கடலை பருப்பை சேர்த்துக் கிளறி அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து சமைக்கவும்.
எண்ணெய் பிரிந்து தேவையான பதத்திற்கு வந்ததும் குழம்பை இறக்கி நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான வடகறி தயார் ரெடி.