வெயில் சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் சருமம் கருப்பாகாமல் ஜொலிக்க..

by Editor News

கோடைக்காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் நாம் வெளியில் போகும் போது சருமம் கருப்பாகாமல் இருக்க ரோஸ் வாட்டரை இரவில் இப்படி பயன்படுத்துங்கள். முகம் ஜொலிக்க வைக்கும் இந்த ரோஸ் வாட்டரை ஒரு சில ஃபேஸ் பேக்கில் பயன்படுத்தி உபயோகிக்கலாம்.

முகத்திற்கு புத்துணர்ச்சி தரக்கூடிய ரோஸ் வாட்டரை இரவில் அப்ளைப் பண்ணி தூங்கிவிட்டு காலையில் முகம் கழுவினால் தங்கம் போல ஜொலிக்கும். கோடை வெயில் அதிகம் இருப்பதால் சருமம் கருமையாக மாறத் தோன்றும். வெயிலில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் போட்டு கழுவினால் முகம் பளபளப்புடன் காணப்படும்.

ரோஸ் வாட்டர் மற்றும் காஃபி பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் முகம் ஜொலிக்க ஆரம்பிக்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பிரகாசமாக முகம் மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க சந்தன பவுடர் 2 டேபிள் ஸ்பூன் மற்றும் ரோஸ் வாட்டர் 3 டேபிள் ஸ்பூன் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து 15-20 நிமிடங்கள் கழித்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வர வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும்.

இதேபோல் ரோஸ் வாட்டருடன் கடலை மாவு, கற்றாழை ஜெல், தேன் போன்ற பொருட்களை கலந்து பேஸ்ட் செய்து முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு முறை தடவி வந்தால் முகம் பளபளப்பாகவும், தங்கம் போலவும் மின்னும்.

Related Posts

Leave a Comment