ஆபிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் டெக்டோனிக் தட்டுகளின் இயக்கத்தின் காரணமாக பூமி இரண்டாக பிளந்துள்ளது. இதை அறிவியல் பூர்வமாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த போது டெக்டோனிக் தட்டுகளின் காரணமாக உலகில் ஒரு புதிய கடல் உருவாகப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
உலகில் ஏற்கனவே 5 பெருங்கடல்கள் உள்ள நிலையில் இது ஆறாவது பெருங்கடலாக உருவாக போவதாக கூறப்படுகிறது. இந்த பகுதி சுமார் 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியதாக கூறப்படுகிறது.
இந்த கடல் உருவாக்கம் பூமியில் பெரும் தாக்கத்ததை உருவாக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பிளவு நடைபெறுவதற்கான காரணம்.
கிழக்கில் சோமாலி தட்டு மற்றும் மேற்கில் நுபியன் தட்டு காரணமாக இது நடக்கிறது. இந்த விரிசல் ஆண்டுக்கு 0.7 மிமீ என்ற விகிதத்தில் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் ஆகியவை அஃபார் பகுதியையும் கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கையும் வெள்ளத்தில் மூழ்கடித்து ஒரு புதிய பெருங்கடலாக உருவாகும் என கண்டறியப்பட்டுள்ளது.