தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வருகிற 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலானது ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், தீவிர வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியை சார்ந்த வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் திருவள்ளூரில் 120 , வாக்கு சாவடிகள், வடசென்னையில் 254 வாக்கு சாவடிகள் ,தென் சென்னையில் 456 வாக்கு சாவடிகள் ,மத்திய சென்னையில் 192 வாக்கு சாவடிகள் ,ஸ்ரீபெரும்புதூரில் 337 வாக்கு சாவடிகள், காஞ்சிபுரத்தில் 371 வாக்கு சாவடிகள் ,அரக்கோணத்தில் 258 வாக்கு சாவடிகள் ,வேலூரில் 246 வாக்கு சாவடிகள், கிருஷ்ணகிரியில் 208 வாக்குச்சாவடிகள், தர்மபுரியில் 311 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருவண்ணாமலை ,ஆரணி, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர் , நீலகிரி, கோயம்புத்தூர் , பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி ,பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை ,தேனி, விருதுநகர் , ராமநாதபுரம் , தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் என மொத்தம் 8050 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.