துருவிய மாங்காய் தொக்கு..

by Editor News

தேவையான பொருட்கள் :

மாங்காய் – 750 கிராம்

மஞ்சள் தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

வெந்தய தூள் – 1 டீஸ்பூன்

பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் – 3/4 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பச்சை மாங்காயை நன்றாக அலசி அதை தோலுடன் சேர்த்து துருவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் வெந்தயம் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

வெந்தயம் ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்துக்கொள்ளவும்.

கடுகு வெடித்ததும் துருவிய மாங்காயைச் சேர்த்து நன்றாக எண்ணெய்யில் வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், வெந்தய தூள், பெருங்காய தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.

தற்போது கடாயை மூடி மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்களுக்கு அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி வேகவிடவும்.

பின்னர் அதனுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

தொக்கில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்தால் சுவையான துருவிய மாங்காய் தொக்கு ரெடி.

Related Posts

Leave a Comment