தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 150 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
புளி கரைசல் – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை :
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து அதை கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் வெண்டைக்காயை சமமான துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கி தனியே ஒரு தட்டில் மாற்றி கொள்ளுங்கள்.
பின்னர் மற்றொரு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் அதில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
எண்ணெய் பிரியும் தருவாயில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
வெண்டைக்காய் நன்கு வெந்து மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்தால் சுவையான வெண்டைக்காய் கார குழம்பு சாப்பிட தயார்.