வீட்டிலேயே முகம், கை, கால்களில உள்ள முடிகளை நீக்கும் 4 சூப்பர் வழிகள்…

by Editor News

முகம், கை, கால்களில் முடிகள் இ்ல்லாமல் சருமம் பளபளப்பாகவும் வழுவழுவென்றும் இருக்க வேண்டுமென்று தான் எல்லா பெண்களும் விரும்புவார்கள். அதற்காக மாதம் மாதம் நூற்றுக்கணக்கில் செலவு செய்து வேக்சிங் மற்றும் திரட்டிங் போன்றவற்றை செய்வார்கள். இது செலவு என்பதை விட சிலருக்கு சருமத்தில் அழற்சி, தடிப்புகள், எரிச்சல், சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சினைகளைத் தரும். அந்த ரிஸ்க் எடுக்காமல் வீட்டிலுள்ள சில எளிமையான பொருள்களை வைத்து முடிகளை எப்படி வலியில்லாமல் நீக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

​மஞ்சள் மற்றும் பால் :

கால் கப் காய்ச்சாத பச்சை பாலில் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டாக செய்து கொள்ளுங்கள்.

கை, கால் மற்றும் முகத்தைக் கழுவிக் கொண்டு, எங்கெல்லாம் முடிகளை நீக்க வேண்டுமோ அந்த இடத்தில் இந்த பேஸ்ட்டை நன்கு திக்காக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் அப்படியே உலர விடுங்கள். பிறகு கீழிருந்து மேல்நோக்கி இந்த பேஸ்ட்டை லேசாக கைகளில் தேய்த்து எடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ள மெல்லிய பூனை முடிகள் உதிர்வதோடு நல்ல பளபளப்பையும் தரும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சரும எரிச்ச்ல் வராமலும் தடுக்கும்.

கடலைமாவு மற்றும் தயிர் :

​கடலை மாவு மற்றும் தயிர் இரண்டுமே சருமத்திற்கு நன்மை செய்யக்கூடிய விஷயங்கள் தான். இந்த இரண்டையும் வைத்து முகம் மற்றும் கை, காலக்ளில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க முடியும்.

ஒரு பௌலில் 4 ஸ்பூன் தயிருடன் 2 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாகக் கலந்து அந்த கலவையை முடி உள்ள இடங்களில் அப்ளை செய்து 20-30 நிமிடங்கள் வரை உலர விடுங்கள்.

நன்கு காய்ந்தபிறகு, அதை முடியின் எதிர்திசையில் விரல்களை வைத்து நன்கு தேய்த்து எடுக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரால் நன்கு கழுவிக் கொள்ளலாம்.

ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் :

முகம் மற்றும் கை, கால்களில் உள்ள முடிகளை அகற்றுவதோடு, சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கவும் இந்த வாழைப்பழ ஓட்ஸ் பேக் உதவி செய்யும்.

ஓட்ஸை மிக்ஸியில் பொடி செய்து, அதோடு வாழைப்பழத்தை பேஸ்ட்டாக்கி ஸ்மூத்தான பேஸ்ட்டாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த கலவையை முடி உள்ள இடங்களில் அப்ளை செய்து 20-30 நிமிடங்கள் வரை உலர விடுங்கள்.

பின்பு இதை குளிர்ந்த நீர் கொண்டு நன்கு தேய்த்து கழுவிக் கொள்ளுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை செய்து வரும்போது முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பிக்கும். அதோடு சருமத்துக்கு நல்ல பளபளப்பும் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment