கரு கருவன முடி நீளமாக வளர வேண்டுமா.?

by Editor News

பெண்களுக்கு தலை முடி என்பது அழகு சார்ந்தது மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையை கொடுக்கும் ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு முடி நீளமாக வளர்வதற்கு பலவிதமான சிகிச்சைகளை செய்து வந்தாலும் இது பக்க விளைவுகளை கொடுக்கும். இதன்படி தலையில் ஏற்படும் பொடுகு தொல்லை, பேன் தொல்லை, முடி உதிர்வு பிரச்சனை, வழுக்கை தலை போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளையும் சரி செய்ய இந்த ஒரே எண்ணெய் போதும். இதை தினமும் இரவில் பயன் படுத்தி பாருங்க?

தேவையான பொருட்கள் :

முருங்கை இலை, கருவேப்பிலை இலை, மிளகு, ஆலிவ் எண்ணெய், வைட்டமின் ஈ மாத்திரை

செய்முறை :

முதலில் முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு, கருவேப்பிலை இலை ஒரு கைப்பிடி அளவு, மிளகு சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் 200 ml ஊற்றி அதில் அரைத்த கலவையை போட்டு எண்ணெயில் சாறு நன்றாக இறங்கும் அளவு கொதிக்க விட வேண்டும். பின்பு இதில் வைட்டமின் ஈ மாத்திரைகளை போட்டு நன்றாக கொதித்த பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் காற்று போகாத அளவிற்கு நன்றாக மூடி வைத்துக் கொண்டால் இதனை ஒரு மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த எண்ணெயில் உள்ள முருங்கை இலையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் இது முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அதிகமாக முடி உதிரும் பிரச்சினை இருப்பவர்கள் இந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம். மேலும் இதில் உள்ள கருவேப்பிலை இலை தலையில் உள்ள பொடுகு தொல்லையை சரி செய்வதோடு, இதில் உள்ள மிளகு தலையில் உள்ள புண்கள், பேன்களை முற்றிலுமாக நீக்குகிறது. இவ்வாறு மருத்துவ குணம் நிறைந்த இந்த எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் தலையில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளையும் சரி செய்யலாம்.

Related Posts

Leave a Comment