மேஷம்:
பணியிடத்தில் பிறர் மீது அதிகமாக ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கவும். புத்திசாலித்தனமான முதலீடு செய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் தற்போதைக்கு சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வெற்றியை உறுதி செய்ய பொருளாதார விதிகளை கடைபிடிக்கவும்.
ரிஷபம் :
கசப்பான ஒரு சில நிகழ்வுகள் உங்களுக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தலாம். வலுவான அடித்தளத்திற்கு வெளிப்படையான பேச்சு அவசியம். கடந்த காலத்தில் தங்கத்தில் நீங்கள் செய்த முதலீடுகளுக்கான பலன்களை இப்போது பெறுவீர்கள். வயிற்றின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கைகளை எப்பொழுதும் சுத்தமாக கழுவவும். ஆரோக்கியமான உணவை சாப்பிடவும், ஆரோக்கியத்தை பராமரிக்கவும்.
மிதுனம் :
கெரியரில் நீங்கள் எதிர்பார்த்த மைல்கல்லை அடைவீர்கள். விடாமுயற்சியுடன் செயல்படும் பொழுது அதற்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளை குறைக்க முயற்சி செய்யவும். பொருளாதார நிலைப்பாட்டை அடைய புத்திசாலித்தனமாக திட்டமிட்டு எதிர்காலத்திற்கு சேமிக்கவும். ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சியை மேற்கொள்ளவும்.
கடகம்:
நிலையான வருமானத்தை பெற்று வருகிறீர்கள் என்றால் அதனை அதிகரிப்பதற்கான வேலைகளை செய்ய வேண்டிய நேரம் இது. குடும்ப பொறுப்புகளை கையில் எடுத்து அவற்றிற்கு முன்னுரிமை தாருங்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான விஷயங்களில் ஈடுபடவும். உடலை கழிவு நீக்கம் செய்யவும்.
சிம்மம் :
பணியிடத்தில் எப்பொழுதும் தனியாக வேலை செய்வதை தவிர்க்கவும். பிறரை குறைவாக எடை போடுவதால் ஒரு சில வாய்ப்புகளை தவறவிடுவீர்கள். கடன்களை திருப்பி செலுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களோடு நல்ல உடல் ஆரோக்கியத்திற்கான இலக்குகளில் கவனத்தில் செலுத்தவும். ஒரு நேரத்தில் ஒரு படி எடுத்து வைப்பதன் மூலமாக புதிய இலக்குகளை எளிதாக அடையலாம்.
கன்னி :
கெரியரில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவும். எனினும் உங்களுடைய அணுகுமுறையில் அதிகப்படியாக விடாப்பிடியாக இருப்பதை தவிர்க்கவும். புத்திசாலித்தனமான பொருளாதார முடிவுகளில் கவனம் செலுத்தவும். உங்களுடைய உடல் மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு யோகாவை உங்கள் வழக்கத்தில் சேர்க்கவும்.
துலாம் :
கெரியரில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உயரத்தை அடைவதற்கு கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும் அவசியம். கூடிய விரைவில் பெரிய அளவிலான ஒரு தொகை கைக்கு வந்து சேரும். கடுமையான உழைப்பும் விடாமுயற்சியும் பொருளாதார வெற்றியை அடைய உதவுவதற்கான ஒரு அறிகுறி தென்படுகிறது. இலக்குகளில் கவனம் செலுத்தி அதனை நோக்கி பயணிக்கவும்.
விருச்சிகம் :
கெரியர் வெகு விரைவாக நகர்வது போல தெரியலாம். அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொண்டு சுய பராமரிப்பில் ஈடுபடுவது நல்லது. பண விஷயத்தில் எதார்த்தமான அறிவு திறன் அவசியமானது. லாபத்தை அதிகப்படுத்த ஷேர் மற்றும் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம். நீங்கள் பின்பற்றக்கூடிய அலட்சியமான பழக்கவழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவும்.
தனுசு :
உங்களுக்கு கெரியரில் கூடிய விரைவில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. சம்பள உயர்வு அல்லது பிரமோஷன் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளது. எப்பொழுதும் திறந்த மனதோடு இருக்கவும். பொருளாதார திட்டமிடலை ஆரம்பத்தில் இருந்து துவங்குவதற்கான நேரம் இது. வருமானத்திற்கான ஒரு புதிய மூலம் உங்களை தேடி வருகிறது. எண்ணெய் உணவுகளை தவிர்த்து, உங்களது வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்ப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.
மகரம் :
புதிய அனுபவங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். பொருளாதார முடிவுகளில் தெளிவு பெற வேண்டிய நேரம் இது. கடந்த கால முதலீடுகளில் கவனம் செலுத்துவதன் மூலமாக வளர்ச்சி அடையலாம். நண்பர்களுடன் சேர்ந்து சிறு பயணத்தை மேற்கொள்வீர்கள்.
கும்பம் :
கெரியர் வழக்கத்தை விட விரைவாக நகர்வதைப் போல தெரியலாம். கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பயன்படுத்தி ஒரு சில காரியங்களை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். சோர்வு தட்டினாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது ஓய்வு எடுத்து சுய பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்கவும்.
மீனம் :
கெரியரில் கூடிய விரைவில் ஆர்வமூட்டும் விஷயங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் அவர்களது திட்டங்களில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். புதிய வாய்ப்புகளை கண்டுபிடிப்பதற்கான நேரம் இது. உங்களிடம் போதுமான அளவு சேமிப்பு அல்லது சொத்துக்கள் இருந்தாலும் உங்களுடைய திறன்களை மேம்படுத்து கொள்வது அவசியம். சரியான திட்டமிடல் மூலமாக உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். உங்கள் உடல் மட்டும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்யவும்.