நடிகர் விஸ்வேஷ்வர ராவ் பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர்.விக்ரம் சூர்யா நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்ர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், குழந்தை நட்சத்திரமாக 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் இவர். சுமார் 350 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவருக்கு தற்போது வயது 62.
இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட விஸ்வேஷ்வர ராவ், சினிமாவில் மட்டுமல்லாது சீரியல்களிலும் நடித்து வந்தார். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர் தனது சினிமா வாழ்க்கையை எழுத்தாளர் மற்றும் இயக்குநராகத் தொடங்கினார்.