கோடைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பில் ஹேர் மாஸ்க் செய்வது கூந்தலை வறட்சியிலிருந்து பாதுகாக்கும். கோடைக்காலம் பொடுகு, வியர்வை, அழுக்கு மற்றும் இன்னும் பல தலைமுடி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஹேர் மாஸ்க் பயன்படுத்தும் போது அது பொடுகுத்தொல்லை, உச்சந்தலை எண்ணெய்ப் பசை மற்றும் முடி உதிர்வு போன்றவை கட்டுப்படுத்தப்படும். . சம்மர் காலத்தில் கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன, அதற்கேற்ற ஹேர் மாஸ்க் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கும் ஹேர் மாஸ்க் :
வாழைப்பழ ஹேர் மாஸ்க்
தேவை
வாழைப்பழம் – 1 (முடிக்கேற்ப கூட்டிகொள்ளலாம்)
தேன் – 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – தேவைக்கு
செய்முறை
வாழைப்பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து ஒரு சுற்று சுற்றி நன்றாக கலக்கவும்.
இதை கூந்தலின் உச்சந்தலை முதல் நுனிவரை தடவி 30-40 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பிறகு அலசி எடுக்கவும்.
நன்மைகள்
அதிக வெப்பநிலையில் கூந்தல் இழந்த ஈரப்பதத்தை மீட்க செய்யும். கூந்தல் உடையக்கூடிய மற்றும் மெல்லியதாக மறும். வாழைப்பழம் முடியை அடர்த்தியாக்கி ஈரப்பதத்தை அதிகரிக்கும். தேன் முடியை ஈரப்பதமாக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் முடியை மென்மையாக்குகிறது.
பொடுகை போக்கும் ஹேர் மாஸ்க் :
வெந்தயம் ஹேர் மாஸ்க்
தேவை
வெந்தயம் – 3 அல்லது 4 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
செய்முறை
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் பேஸ்ட் ஆக்கி கொள்ள்வும். பிறகு தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்
பளபளப்பான மற்றும் மென்மையான முடியை அடைய பொடுகு மற்றும் முடி இழைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஹேர் மாஸ்க் உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களில் தடவவும். பிறகு40 நிமிடங்கள் வைத்திருந்து கூந்தலை அலசி எடுக்கவும்.
நன்மைகள்
வெந்தயம் வறட்சி, அரிப்பு, பொடுகு போன்றவற்றை எதிர்த்து போராடக்கூடியது. இது முடியை ஈரப்பதமாக்குகிறது. அரிப்பு சரி செய்கிறது. தயிர் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது. ஈரப்பதமாக குளிர்ச்சியாக வைத்திருக்க செய்கிறது.