97
ஏப்ரல் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுகூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆயுர்வேத சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பா ஏப்ரல் முதலாம் திகதி விவாதம் இடம்பெறவுள்ளதுடன் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பரேட் திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஏப்ரல் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மேலும் அன்றைய தினம் கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் பெறுமதி சேர் வரி சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது.