கர்ப்பிணியின் உடல் வெப்பநிலை சூடாக தான் இருக்கும்.. ஏன் ?

by Editor News

கர்ப்பகாலத்தில் அதிக உடல் வெப்பநிலை என்பது தீவிரமாகும் போது அது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை உண்டு செய்யலாம் என்கிறது ஆராய்ச்சி ஒன்று. உடல் வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது அதற்கு மேல் இருப்பது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சூடாக உணர செய்யலாம். அதனால் கர்ப்பிணி ஓரளவுக்கு உடல் வெப்பநிலை இருக்கும் போது கவலை வேண்டாம். ஆனால் அதிகமாக இருக்கும் போது அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம். மேலும் ஆய்வுகளின் படி வெப்ப அழுத்தம் குழந்தையின் குழந்தையின் முதுகெலும்பு உருவாவதில் சிக்கல்களை உண்டு செய்யலாம். இவை நரம்பு குழாய் குறைபாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. கர்ப்பகாலத்தில் உடல் வெப்பநிலை அதிகரிக்க என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்வோம்.

​கர்ப்பிணிக்கு ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள்​ :

கருவுற்ற உடன் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். புரோஜெஸ்ட்ரான் அளவுகளின் அதிகரிப்பு வாசோடைலேஷன் தூண்டுகிறது. இது இரத்த நாளங்களின் தசை சுவர்களின் தளர்வு காரணமாக இரத்த நாளங்களை விரிவுப்படுத்தலாம். இதனால் இரத்த ஓட்டம் மேம்பட்டு வெப்ப உணர்வு உண்டாகிறது. முதல் மூன்று மாதங்களில் ஹார்மோன் மாற்றங்களால் காலை நோய் உடன் உடல் வெப்பநிலை அதிகரிக்கலாம். இது பொதுவானது.

கர்ப்பிணிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க காரணம்​ :

கர்ப்பகாலத்தில் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். கருப்பை விரிவடைய கூடும். அப்போது இரத்த நாளங்களில் அழுத்தம் உண்டாகலாம். இதுவும் உடல் வெப்பநிலையை அதிகரிக்க காரணமாகிறது. கர்ப்பிணிக்கு 50% வரை இரத்தம் அதிகரிக்கலாம். இதனால் இரத்த நாளங்கள் விரிவடைந்து தோலில் வெப்ப உணர்வை உண்டு செய்யும். இது இயல்பானது.

​கர்ப்பிணிக்கு வளர்சிதை மாற்ற விகிதம்​ :

கர்ப்பகாலத்தில் இதயத்தில் கூடுதல் இரத்தம் சுழற்சிக்கு இருப்பதால் அதற்கேற்ப கடினமாக உழைக்க வேடும். கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் வழக்கத்தை விட 20% வேகமாக இரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. அதிக இதயத்துடிப்பு வளார்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அப்போது உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது. மேலும் ஊட்டச்சத்து மற்றும் கலோரிகள் தாய் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பகிர்வதால் வளர்சிதை மாற்றம் மேலும் அதிகரிக்கிறது. அதிகரித்த ஆற்றல் அதிக தீவிர வெப்ப உணர்வுகளை காட்டலாம்.

கர்ப்பிணி எடை அதிகரிப்பது உடல் வெப்பநிலை அதிகரிக்கும்?​

கர்ப்பகாலத்தில் சுமார் 25-35 பவுண்டுகள் வரை அதிகரிக்கலாம். இது இயல்பானது. ஆரோக்கியமானது. ஆனால் கூடுதல் உடல் எடை அதிகரிப்பது அதிக வெப்பம் உண்டு செய்யும். கர்ப்பிணி பெண்கள் கரு, நஞ்சுக்கொடி, விரிவாக்கப்பட்ட கருப்பை மற்றும் மார்பாங்கள் மற்றும் அதிகப்படியான கொழுப்பு மற்றும் இரத்த ஓட்டம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க செய்யும். இவை உடல் வெப்பநிலை அதிகரிக்க செய்யலாம்.

கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்​ :

குழந்தை வளரும் போது உடலுக்கு உறிஞ்சும் வெப்பத்தை அளிக்கிறது. அப்போது தாய் அதிக வெப்பத்தை உணரலாம். குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் போது சாதராண கர்ப்பத்தை விட அதிக வெப்பத்தை உணரலாம்.

​கர்ப்பிணிக்கு உடல் வெப்பநிலை அதிகரிக்க வேறு சில காரணங்கள்​ :

குளியல் தொட்டிகளில் சூடான நீரில் குளிப்பது ஆரோக்கியமானது அல்ல. அதே போன்று சூடான தண்ணீர் பாட்டில் அல்லது வெப்பமூட்டும் திண்டுகள் போன்றவற்றை தசைவலிக்கு பயன்படுத்தும் போது உடல் வெப்பநிலை அதிகரிக்கலாம். தசைவலி இருந்தாலும் வயிற்றுக்கு அருகில் இதை பயன்படுத்த வேண்டும்.

நேரடியான திண்டு வைக்காமல் சருமத்துக்கும் வெப்ப திண்டுக்கும் இடையில் ஒரு துணியை வைத்துகொள்ளுங்கள். வெப்பமான வானிலை கூட அதிக வெப்பநிலையை உண்டு செய்யலாம். நீரிழப்பு மற்றும் வெப்பசோர்வு போன்ற உடல்நல பிரச்சனைகள் கூட உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். அதனால் உடல் வெப்பநிலையை உணரும் போது குளிர்ச்சியாக்க முயற்சி செய்யுங்கள்.

Related Posts

Leave a Comment