இன்றைய ராசி பலன் – மார்ச் 29 2024

by Editor News

மேஷம்:

இன்றைய நாள் முழுவதும் ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள். வீட்டில் இருப்பதை பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் உணர்வீர்கள். வேலைகளில் சிக்கல்கள் இருந்தாலும் அவற்றை உங்களின் விடா முயற்சி மூலமாக சமாளிப்பீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

ரிஷபம்:

உங்களைச் சுற்றியுள்ள அழகை ரசிப்பதற்கு நேரத்தை செலவிடுங்கள். வீட்டில் அமைதியான சூழலை உருவாக்கி சௌகரியமாக உணருங்கள். வேலையில் உங்களுடைய பொறுமையை சோதிக்கும் விதமாக ஒரு சில விஷயங்கள் நடைபெறலாம். உங்களுடைய திறன்களை நம்பி எதிர்கால கனவுகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவும்.

மிதுனம்:

எப்போதும் போல் இல்லாத அளவுக்கு உங்கள் மூளை இன்று சுறுசுறுப்பாக காணப்படும். வேலையில் எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் உங்களின் திறன் மூலமாக அவற்றை சமாளிப்பீர்கள். எதிர்கால இலக்குகளில் கவனம் செலுத்தவும். உங்களுடைய உடல் மற்றும் மன நலனில் சமநிலையை உருவாக்கி ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

கடகம்:

வாழ்க்கையில் உங்களுடன் பயணிக்கும் நபர்களை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் உங்களுடைய பொறுமையை சோதித்தாலும் உங்கள் உள்ளுணர்வை நம்பி சரியான பாதையில் செல்லுங்கள். சுய பராமரிப்பு விஷயங்களில் ஈடுபடவும்.

சிம்மம்:

உங்களைச் சுற்றி நேர்மறையான விஷயங்களை வைத்திருக்க முயற்சி செய்யவும். வேலையில் பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை உங்களுடைய தன்னம்பிக்கை மூலமாக எதிர்கொள்வீர்கள். உங்களுடைய அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்ப்பதன் மூலமாக உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

கன்னி:

உறவுகளை வலுவாக்குவதற்கு எதையும் வெளிப்படையாக பேசுங்கள். பணியிடத்தில் சிக்கல்கள் வந்தாலும் அவற்றை உங்களுடைய பகுப்பாய்வு திறன் மூலமாக சமாளிப்பீர்கள். ஓய்வு மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதில் கவனம் செலுத்தவும்.

துலாம்:

வீட்டில் அமைதியை உருவாக்குவதற்கான விஷயங்களில் ஈடுபடுங்கள். உங்களுடைய ராஜதந்திரம் மூலமாக பணியிடத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எளிதில் எதிர்கொள்வீர்கள். வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டிற்கும் இடையே சமநிலையை உருவாக்கவும்.

விருச்சிகம்:

மனதளவில் உங்களை வலிமைப்படுத்தி ஊக்குவிக்க கூடிய வகையில் வீட்டில் தனியாக ஒரு இடத்தை ஒதுக்கவும். உங்களுடைய பொறுமை மூலமாக பணியிடத்தில் வரும் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். மனநலனில் கவனம் செலுத்துவதன் மூலமாக உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும்.

தனுசு:

உங்களின் புத்தாக்க திறனை மேம்படுத்துவதற்காக வீட்டில் தனியாக ஒரு இடத்தை ஒதுக்கவும். வேலையில் சவால்கள் இருந்தாலும் உங்களுடைய நேர்மறையான அணுகுமுறை மூலமாக அவற்றிற்கான தீர்வுகளை காண்பீர்கள். எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கவும். இயற்கை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

மகரம்:

உங்களுடைய நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு உதவக் கூடிய வகையில் வீட்டில் ஒரு இடத்தை ஒதுக்கவும். உங்களின் உறுதியுடைமை மூலமாக பணியிடத்தில் வரும் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். சமநிலையான வாழ்க்கை முறையை பராமரிப்பதன் மூலமாக உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

கும்பம்:

உங்களுடைய தனித்துவத்தை ஏற்று அதனை மதிக்கக்கூடிய வகையில் வாழ்க்கை துணையை அமைத்துக் கொள்ளவும். உங்களுடைய புத்தாக்க திறனை ஊக்குவிக்கும் வகையில் வீட்டில் ஒரு இடத்தை அமைக்கவும். உங்கள் அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் ஆரோக்கியத்தை பேணவும்.

மீனம்:

பல்வேறு விதமான சந்தேகங்களை இன்று உங்களுடைய உள்ளுணர்வு தீர்த்து வைக்கும். வீட்டில் அமைதியான சூழலை உருவாக்கவும். உங்களுடைய பச்சாதாப உணர்வு மூலமாக பணியிடத்தில் வரும் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். அமைதியை தேடி சுய பராமரிப்பில் கவனம் செலுத்தவும்.

Related Posts

Leave a Comment