உங்களின் முக அழகை மேலும் அழகாக்குவதற்காக சில அழகுக்குறிப்புகள் இதோ உங்களுக்காக…
இயற்கையான முறையில் முகத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எவ்வித அச்சமும் இன்றி கற்றாழையை தேர்வு செய்யலாம். கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையக்கூடும். மேலும் முகப்பரு வடுக்களையும் குறைக்கவும் உதவியாக உள்ளது.
பெண்கள் அடுத்ததாக முக பொலிவிற்காக தேன் தேர்வு செய்யலாம். இதில் உள்ள இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தைத் தெளிவாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் தினமும் தேனை முகத்தில் அப்ளை செய்யும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தை பிரகாசமாக்குகிறது.
பப்பாளி பெண்களின் முகத்தை பளபளபாக்குவதற்கு உதவும் அழகு சாதனப் பொருள்களில் முக்கியமானது. இதில் உள்ள பப்பைன் என்ற வேதிப்பொருள் முகத்தில் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை மெதுவாக நீக்குகிறது. மேலும் முகத்தைப் பொலிவாக்குகிறது. நீங்கள் பழுத்த பப்பாளி அல்லது அதன் தோலைக் கொண்டு முகத்தில் கிரப் செய்வது போன்று தேய்த்து அரை மணி நேரத்திற்கு அப்படிவே விட்டுவிடவும்.
மஞ்சள் பூசினாலே பெண்கள் கூடுதல் அழகைப் பெறுவார்கள். பெண்கள் கருப்பாக இருந்தாலும் மஞ்சள் பூசி குளிக்கும் போது கலையாக இருப்பார்கள். இதில் உள்ள குர்குமின் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகத்தை பளபளப்புடன் வைத்திருக்க உதவுகிறது. காலையில் அல்லது தூங்குவதற்கு முன்னதாக முகத்தில் மஞ்சள் அப்ளை செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பின்னர் முகத்தைக் கழுவும் போது முகம் பளபளப்பாக இருக்கும்.
தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால், பளபளப்பான சருமத்திற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக உள்ளது. தேன் கலந்து அல்லது தயிரை அப்படியே அப்ளை செய்யும் போது சருமத்தில் இருக்கும் லாக்டிக் அமிலம், மெல்லிய கோடுகளை குறைக்க உதவுகிறது. கரும்புள்ளிகளையும் அகற்றுகிறது.
வாழைப்பழத் தோல்கள் பெண்களின் சருமத்தின் நிறத்தை மாற்றுவதற்கும் கருவளையங்களை நீக்கவும் உதவுகிறது. எனவே வாழைப்பழத்தோலை உங்கள் தோலில் மெதுவாக தேய்க்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் தண்ணீரில் கழுவவும்.
ஒவ்வொரு நாளும் இரவில் பச்சைப் பாலை முகத்தில் தேய்க்கும் போது, சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.